மோட்சத்தில் இடம் உண்டு…

ஆங்கில இலக்கியம் என்ற மோட்ச ஸதலத்தில் இடம் பிடிக்க gay-யாக மாறுவது தவிர வேறொரு வழி இருப்பதாக நண்பர் மெஸேஜ் அனுப்பி என் மன உளைச்சலைத் தீர்த்திருக்கிறார்.  இதோ அந்த மெஸேஜ்:

ஆங்கில உலகில் நீங்கள் gay ஆக மாறாவிட்டாலும் மோட்சம் பெற ஜன்னல் இடுக்கில் ஒரு நம்பிக்கைக் கீற்று ஒளி அளிக்கிறது.  அது உங்கள் நாய் – பூனை பாசம்.  ஆங்கில இலக்கியத்தில் சோபிப்பதற்கான அதி முக்கியத் தகுதிகளில் ஒன்று: The author lives with his two dogs and a cat என்று புத்தகத்தின் பின்னட்டையில் போடுவது.

***

நண்பர் சொல்வது சாலவும் சரியே.  தர்மர் மோட்சத்துக்குப் போகும் போது அவர் கூடச் சென்ற ஒரே ஜீவன் நாய் தானே?